டிரெண்டிங்

நாளை தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம்: விஜயதரணி அறிவிப்பு

நாளை தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம்: விஜயதரணி அறிவிப்பு

Rasus

காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதரணி அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் சட்டப்பேர‌வை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என விஜயதரணி கேட்டுக்கொண்டுள்ளார். வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாளை மாலை சென்னையில் அக்கட்சியின் தலைமையகத்திலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுகரசர் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என தெரியவந்துள்ளது.