டிரெண்டிங்

ஒலிம்பிக் : இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி

EllusamyKarthik

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் கொலம்பிய வீராங்கனை Ingrit Valencia-விடம்  தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார். 

51 கிலோ பிளை வெயிட் பிரிவில் 2 - 3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மேரி கோம் ஆட்டத்தை இழந்துள்ளார். கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார் அவர். 

அதே போல 2016 ரியோ ஒலிம்பிக்கில் Ingrit Valencia வெண்கலம் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சீனியர் வீராங்கனை என்ற அந்தஸ்துடன் 38 வயதான மேரி கோம் பங்கேற்று விளையாடினார்.