டிரெண்டிங்

சசிகலாவின் மறுசீராய்வு மனு மீது இன்று விசாரணை

சசிகலாவின் மறுசீராய்வு மனு மீது இன்று விசாரணை

webteam

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்த சசிகலாவின் மறுசீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று விசாரிக்கப்பட உள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2ம் தேதி சீராய்வு மனு விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் விசாரணைக் குழுவில் இருந்து விலகியதால் பட்டியலில் இருந்து சசிகலாவின் மனு நீக்கப்பட்டது.

தற்போது ரோஹின்டன் நாரிமனுக்கு மாற்றாக நீதிபதி பாப்டே விசாரணைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப் படே, அமிதவராய் அமர்வு விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.