டிரெண்டிங்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவு

webteam

ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கருநாகராஜன் போட்டியிடுகிறார். இவர்களுடன் சுயட்சையாக நடிகர் விஷாலும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் பொதுச்செயலாளர் தீபாவும் போட்டியிடுகின்றனர். இதில் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துவித்துள்ளன.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று பாரதிய ஜனதா சார்பில் கரு நாகராஜனும் நடிகர், விஷாலும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபாவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். இதற்கிடையில் தொப்பி சின்னத்தை ஒதுக்க கோரும் டிடிவி தினகரன் வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.