டிரெண்டிங்

ஐபிஎல் இன்றைய போட்டிகள்: ராஜஸ்தான் VS ஹைதராபாத் - மும்பை VS டெல்லி.!

ஐபிஎல் இன்றைய போட்டிகள்: ராஜஸ்தான் VS ஹைதராபாத் - மும்பை VS டெல்லி.!

Veeramani

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.

துபாயில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ‌ராஜஸ்தான் அணியும், வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத் அணி 6 போட்டிகளிலும், ‌ராஜஸ்தான் அணி ‌5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌

அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 12 போட்டிகளிலும், டெல்லி அணி ‌12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌