டிரெண்டிங்

ஐபிஎல் இன்றைய போட்டிகள்: பெங்களூர் vs டெல்லி

ஐபிஎல் இன்றைய போட்டிகள்: பெங்களூர் vs டெல்லி

Veeramani

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி நடப்பு சீசனில் 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி கண்டுள்ளது. ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வாகை சூடியுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் பெங்களூர் அணி 14 போட்டிகளிலும், டெல்லி அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை