டிரெண்டிங்

இன்று எங்களுக்கு தீபாவளி: மைத்ரேயன்

இன்று எங்களுக்கு தீபாவளி: மைத்ரேயன்

Rasus

இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்தது மூலம் இன்று எங்களுக்கு தீபாவளி என மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

"ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணி இணைந்து மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?" இப்படி ஒரு பதிவை ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக மூத்த தலைவருமான வி.மைத்ரேயன் சில தினங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் வாத விவாதங்களை சூடாக்கியது. தொண்டர்களின் கருத்தை தான் எதிரொலித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அப்படியென்றால், ஓபிஎஸ்-இபிஎஸ் அணியில் கருத்து வேறுபாடு நிலவுகிறதா என பேசப்பட்டது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்தது மூலம் இன்று எங்களுக்கு தீபாவளி என மைத்ரேயன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  " தலைமை தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் -ஈபிஎஸ் அணியை அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு உரிதாக்கியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை இன்று எங்களுக்கு தீபாவளி" என கூறியுள்ளார்.