தமிழக அரசியல் களம் பல திருப்பங்களை எதிர்கொண்டுள்ள சூழலில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மாலை நான்கரை மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை தமிழகம் வருகிறார். தற்போதைய அரசியல் சூழலில் ஆளுநரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.