டிரெண்டிங்

ஆய்வு நடத்த ஆளுநருக்கு உரிமை உள்ளது: அமைச்சர் உதயகுமார் கருத்து

ஆய்வு நடத்த ஆளுநருக்கு உரிமை உள்ளது: அமைச்சர் உதயகுமார் கருத்து

Rasus

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், ஆய்வு செய்‌யவும் ஆளுநருக்கு உரிமை உள்ளதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பருவமழை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது. சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களிலும் 15 உயர் அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இரவு, பகலாக தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின்படி வடகிழக்கு பருவமழையை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளோம். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், ஆய்வு செய்‌யவும் ஆளுநருக்கு உரிமை உள்ளது” என்றார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் நேற்றும், இன்றும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்தார். இது மாநில உரிமைகளுக்கு எதிரானது என பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், ஆய்வு செய்‌யவும் ஆளுநருக்கு உரிமை உள்ளதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.