டிரெண்டிங்

கடலூரில் அமைச்சர் சம்பத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்‌..!

Rasus

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கச் சென்ற தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து ராதா வாய்க்கால் மதகை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த்.மு.வடநேரே ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இதனால் 102 கிராமங்களில் உள்ள 44,856 ஏக்கர் பாசன பரப்பு பயன் அடையும். இந்த நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் சென்றபோது அவரது வாகனத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காரணம் என்னவென்றால், கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு
எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் பேசியிருந்ததை கண்டித்து விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வீராணம் ஏரியை முறையாக தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் மாற்றாமல், அதிலுள்ள தண்ணீரை திறந்த‌ விடுவதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.