டிரெண்டிங்

“அமைச்சர் மாஃபா ஒரு புள்ளிராஜா” : ஓபிஎஸ் பேச்சு

“அமைச்சர் மாஃபா ஒரு புள்ளிராஜா” : ஓபிஎஸ் பேச்சு

webteam

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஒரு புள்ளிராஜா என தமிழக துனைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் உள்ள நாடார் சரசுவதி தொடக்கபள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாண்டு துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “தமிழகத்தில் கல்வி கண் திறந்தவர் காமராஜர்.காமராஜர் கொண்டு வந்த திட்டங்களை சாதனையாக்கி காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.தமிழக அரசின் வரி வருவாயில் 4ல் ஒரு சதவீதம் கல்விக்காக செலவிடப்படுவதாகவும், இந்தியாவிலேயே மாணவர்களின் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவீதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது” என்றார்.

இதனைத் தொடர்ந்து  பேசிய அவர் தமிழகத்தில் தற்போதைய தமிழ் வளர்ச்சி மற்றும் ஆட்சி மொழி துறை அமைச்சராக இருக்கும் மாஃபா. பாண்டியராஜன்,இதற்கு முந்தைய இதேதுறையில் இருந்த அமைச்சர்களிலேயே சிறந்த அமைச்சர் என்றும், அவர் புள்ளி விபரங்களை கூறுவதில் ஒரு புலியாக திகழ்ந்து வருபவர் என்றும் கூறலாம். மேலும் அவரை புள்ளி ராஜா என சொல்லலாம் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.