டிரெண்டிங்

மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டர்களை கோரியுள்ளோம்: முதலமைச்சர் பழனிசாமி

மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டர்களை கோரியுள்ளோம்: முதலமைச்சர் பழனிசாமி

Rasus

குரங்கணி மலைப்பகுதியில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து தமிழக அரசு ஹெலிகாப்டர்களை கோரியுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலை ஏற்றம் சென்றவர்கள் காட்டுத் தீயி‌ல் சிக்கினர் என்ற தகவலை அறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், துணைமுதல்வர், வனத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளா‌ர். மீட்புப் பணிகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அருகில் உள்ள தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் தேவையான உபகரணங்களுடன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீட்புப் பணிக்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் இருந்து தமிழக அரசு ஹெலிகாப்டர்களை கோரியுள்ளதாகவும் தனது அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.