டிரெண்டிங்

நதிநீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை: முதலமைச்சர் கடிதம்

நதிநீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை: முதலமைச்சர் கடிதம்

Rasus

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகளுக்கு தீர்வு காண நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கத் தேவையில்லை எனக் கூறி முதலமைச்சர் பழனிசாமி மத்திய‌ அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையிலான ஒவ்வொரு நதிநீர் பிரச்னையும் தனித்தன்மை கொண்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.  உச்சநீதிமன்ற உத்தரவின்படியே காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிவில் மற்றும் குற்ற வழக்குகளைப் போன்று நதிநீர் வழக்குகளை பார்க்கக் கூடாது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவில்லாமல் காவிரி வழக்குகளை புதிய அமைப்பிற்கு மாற்றக்கூடாது எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.