தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலையில் டெல்லி புறப்பட்டார். காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வர உள்ள நிலையில், டெல்லியில் தமிழக அரசின் வழக்கறிஞர் குழுவை முதலமைச்சர் சந்திக்க இருக்கிறார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் முதலமைச்சர் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வரின் முதன்மை செயலாளர் சாய்குமார், பொதுப்பணி துறை செயலாளர் பிரபாகர் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைய தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைபாடு என்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது.