டிரெண்டிங்

விபத்தில் சிக்கிய குடும்பத்துக்கு அவசரத்தில் உதவிய தமிழிசை

விபத்தில் சிக்கிய குடும்பத்துக்கு அவசரத்தில் உதவிய தமிழிசை

webteam

திருவெற்றியூரில் விபத்தில் சிக்கிய குடும்பத்தை தனது காரில் ஏற்றிச்சென்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மருத்துவமனையில் சேர்த்தார்.

சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெறவிருந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருவெற்றியூரில் இருந்து தமிழிசை தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு குடும்பத்தினர் விபத்துக்குள்ளாகினர். இதைகண்ட தமிழிசை அவர்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்தார். இதையடுத்து விபத்தில் சிக்கிய தாய் மற்றும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.