டிரெண்டிங்

ஜனவரி 8ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

ஜனவரி 8ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

Rasus

தமிழக சட்டப்பேரவை வரும் 8ம் தேதி கூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்போதும் ஆளுநர் உரையுடன் தான் பேரவை தொடங்கும். அதன்படி இந்தாண்டும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார். தமிழக ஆளுநராக பன்வாரில் புரோஹித் பொறுப்பேற்ற பின் பேரவையில் முதல்முறையாக உரையாற்ற உள்ளார்.

ஆர்.கே.நகர் எம்எல்ஏவாக டிடிவி தினகரன் நாளை பதவியேற்க உள்ளார். எனவே ஜனவரி மாதம் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு பின் நடைபெறும் கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுதவிர, வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு, ஒகி புயல் பாதிப்பு ஆகியவை குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.