டிரெண்டிங்

சட்டப்பேரவை ஜூன் 14ல் கூடுகிறது

சட்டப்பேரவை ஜூன் 14ல் கூடுகிறது

Rasus

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான உத்தரவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்துள்ளதாக சட்டப்பேரவை பொறுப்பு செயலர் பூபதி தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது 14ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஜிஎஸ்டி சட்ட மசோதாவுக்கான ஒப்புதலை அளிப்பது இக்கூட்டத்தொடரின் முக்கிய நோக்கம் எனத் தெரிகிறது. இது தவிர மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் இக்கூட்டத் தொடரில் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக குழப்பமான சூழல் நிலவும் நிலையில் இக்கூட்டத் தொடர் நடைபெறுகிறது. கடந்த மார்ச் 16ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்குப் பின் சில நாட்கள் விவாதத்திற்கு பின் அவை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.