டிரெண்டிங்

ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்துக்கு டாட்டா காட்டிய தமிழக அரசு

ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்துக்கு டாட்டா காட்டிய தமிழக அரசு

webteam

ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்தை தற்போதைய தமிழக அரசு மாற்றுவதற்கு மசோதா தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி மேயர்களை மக்களே வாக்களித்து தேர்வு செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. இதனை மாற்றி , மாநகராட்சி உறுப்பினர்களே மேயரை தேர்வு முறையை 2016-ல் அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் தனது முடிவில் இருந்து எபோதும் போல் ஜெயலலிதா மாறவில்லை. 

ஆனால் ஜெயலலிதா இந்த சட்டத்தை கொண்டு வந்த பின்னர், தமிழகத்தில் இன்னும் உள்ளாட்சி தேர்தல் ஒருமுறை கூட நடைபெறவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்தை மாற்றி மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் புதிய மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்துள்ளார். 

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடன் மறைமுக முறை மாற்றப்பட்டு, பழையபடி மேயருக்கான தேர்தல் நடத்தப்படும். மக்கள் வாக்களித்து தங்கள் மாநகராட்சி மேயரை தேர்வு செய்யும் நிலை ஏற்படும்.