டிரெண்டிங்

3 தொகுதி இடைத்தேர்தல்... 11 மணி நிலவர வாக்குப்பதிவு சதவீதம்..!

3 தொகுதி இடைத்தேர்தல்... 11 மணி நிலவர வாக்குப்பதிவு சதவீதம்..!

webteam

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளிலும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு‌ வாக்குப்பதிவு தொடங்கியது. ‌மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன்‌ வாக்களித்தனர். காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில், 32.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

நாங்குநேரி தொகுதியில் ‌23.89 சதவீத வாக்குகள் ‌பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதியிலும் ‌இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது‌. வாக்காளர்கள் மழைக்கு நடுவே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். அந்தத் தொகுதியில் காலை 11 மணி நிலவரப்‌டி 28.17 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.