மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா பரப்புரை மேற்கொள்ள அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளதாக அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா பரப்புரை மேற்கொள்ள அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மம்தா அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும் மாநில மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி குறை கூறியுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதுடன் மாநில அரசின் செயல்களை கண்டித்து போராட்டங்களும் நடத்தப் போவதாக மேற்கு வங்க பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான Anil Baluni தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஜாதவ்பூரில் பரப்புரை செய்ய அமித் ஷா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், ஜாதவ்பூரில் பரப்புரை நிகழ்த்த அனுமதி மறுத்துள்ளதுடன் அவர் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது