டிரெண்டிங்

நெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா ரத்து

PT

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் இந்த வருடம் நடைபெற இருந்த ஆனி பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாநகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில். இக்கோயிலில் இந்த வருடம் ஆனி பிரம்மோற்சவ விழா 25.06.2020 முதல் 04.07.2020 வரை நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்றுக் காரணமாக ஊரடங்கு நீடித்து வருவதால் இந்த ஆண்டு ஆனித்தேரோட்டம் மற்றும் பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.