டிரெண்டிங்

பாஜக தலைமை அறிவிக்கும் முன்பே வேட்புமனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்!

Veeramani

பாஜக தலைமை இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காத நிலையில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் நயினார் நாகேந்திரன்.

பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் “ நல்ல நாள் என்பதால் இன்றே வேட்புமனு தாக்கல் செய்ததாகவும், வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்” என்றும் தெரிவித்தார்.