டிரெண்டிங்

'ஒரு பெண் போட்டியாளரை கமல் இவ்வாறுதான் பேசுவாரா?'- வானதி ஸ்ரீனிவாசன் சிறப்புப் பேட்டி

webteam

"கமல் 'துக்கடா அரசியல்வாதி' என்று பேசிய வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்தியது. ஆரோக்கியமான அரசியல், மாற்றம் போன்றவற்றை முன்வைக்கும் கமல் ஒரு சக பெண் போட்டியாளரை இவ்வாறுதான் பேசுவாரா?" என்று 'புதிய தலைமுறை'-க்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியிருக்கிறார், கோவை தெற்கு தொகுயில் போட்டியிடும் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி ஸ்ரீவாசன். தற்போதைய அரசியல் நிலவரம், கோவையில் இஸ்லாமியர்களுக்கும் பாஜகவினருக்கு இடையே நடந்த சலசலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்த அவரது பேட்டி...

கமலை உதட்டளவில் மட்டுமே வேலை செய்பவர் என்று கூறியது பற்றி? 

”அது என்னை அவர்  ‘துக்கடா அரசியல்வாதி’ என்று கூறியதற்கு நான் கொடுத்த பதில். நான் கூறியதை இவ்வளவு பெரிதாக பேசுபவர்கள், அவர் கூறியதை ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை. கமல் பேசிய அந்த வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்தியது. ஆரோக்கியமான அரசியல், மாற்றம் போன்றவற்றை முன்வைக்கும் கமல் ஒரு சக பெண் போட்டியாளரை இவ்வாறுதான் பேசுவாரா? அதனால்தான் நான் அவர் பிண்ணனியை பற்றி அவ்வாறு பேசினேன்.

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்தபோது, இஸ்லாமியர்களை பாஜகவினர் மிரட்டிய சம்பவம் குறித்து?

அன்று நடந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்று இதுவரை காவல்துறை தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆகையால் பொதுவாக பாஜகவினரை மட்டும் குறை சொல்வது சரியல்ல. எதுவானாலும் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்.

பாஜக தேர்தல் பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் பங்கு அதிகமாக இருக்கிறதே?

தேர்தல் நடக்கும்போது எங்கள் கட்சி தலைவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது வழக்கமான ஒன்று. ஏன் பிரதமர் ஒரு வேட்பாளருக்கு பிரசாரம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது.

முழுமையான நேர்காணல் - வீடியோ வடிவில்...