டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: மகனுக்கு மருத்துவ உதவி கோரிய ஏழைத் தாய்க்கு உறுதுணை

துளிர்க்கும் நம்பிக்கை: மகனுக்கு மருத்துவ உதவி கோரிய ஏழைத் தாய்க்கு உறுதுணை

PT WEB

கொரோனா பேரிடர் காரணமாக சிகிச்சை பெற முடியாத நிலையில் இருந்த சிறுவனுக்கு 'துளிர்க்கும் நம்பிக்கை' மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
'புதிய தலைமுறை' அலுவலகத்திற்கு சென்னையைச் சேர்ந்த விமலா மற்றும் அவரது மகன் சஞ்சய் மருத்துவ உதவி கோரி வந்திருந்தனர். தங்கள் மகனுக்கு மூக்கில் தண்டு வளைந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய ரூ.25,000 வரை செலவாகும் என்றும், தினக் கூலியாக இருப்பதால் அறுவை சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய இயலவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், அவர் தனது மகனுக்கு இந்த மருத்துவப் பிரச்னையால் இரவில் தூங்க முடியாமல் அவுதிப்படுவதாக கவலையுடன் விவரித்தார்.

அதனைத் தொடர்ந்து நம் 'துளிர்க்கும் நம்பிக்கை' குழுவினர் சஞ்சயின் சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யத் தொடங்கினர். சென்னையில் உள்ள மெட்ராஸ் ENT Research foundation மருத்துவமனையின் முதல்வர் மோகன் கமேஷ்வரனை தொடர்புகொண்டு மருத்துவ உதவி கேட்கப்பட்டது.

உடனடியாக உதவி செய்வதாக கூறிய மருத்துவர் மோகன் காமேஷ்வரன், பாதிக்கப்பட்ட சஞ்சயை மருத்துவமனைக்கு நேரில் அழைத்து சிகிச்சை அளித்தார். மருத்துவர் அறிவுறுத்திய 3 மாதத்திற்கு தேவையான மருந்துகளையும் 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' குழு சார்பில் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.