அதிமுகவை வேறு யாராலும் அழிக்க முடியாது. அக்கட்சியினரே அழித்துவிடுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். .
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை அழிக்க பாரதிய ஜனதா கட்சி பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் உண்மையில் அதிமுகவை வேறு யாராலும் அழிக்க முடியாது. அக்கட்சியினரே அழித்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறையினரின் சோதனை ஊழலுக்கு எதிராக நடைபெறுவது என்றார்.
பாஜக அரசு ஊழல் செய்ய யாரையும் தூண்டியதில்லை என்றும் அதே போல் ஊழல் செய்பவர்களை தண்டிக்காமல் விட்டதும் இல்லை என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துரையினர் சோதனைகளுக்கு பிஜேபியின் தூண்டுதலே காரணம் என்று காங்கிரஸ் உட்பட எதிர்கட்சி தலைவர்கள் பலர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.