டிரெண்டிங்

வழக்கமான குடியரசுத் தலைவர் தேர்தல் இதுவல்ல: மீராகுமார்

வழக்கமான குடியரசுத் தலைவர் தேர்தல் இதுவல்ல: மீராகுமார்

Rasus

கொள்கையின் அடிப்படையிலேயே கட்சிகள் தன்னை ஆதரிப்பதாக எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 17 கட்சிகள் சேர்ந்து தன்னை குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 17 கட்சிகள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. சமூக நீதி மற்றும் ஜனநாயக மரபுகளை காப்பதில் மாபெரும் சக்தியாக விளங்குபவர் கருணாநிதி. ஊடக சுதந்திரத்திற்காகவும் பேச்சு உரிமைக்காகவும் நான் போராடி கொண்டிருக்கிறேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான். கடந்த சில நாட்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகள் நடந்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல் போன்று இது இல்லை. நாம் அனைவரும் கொள்கை ரீதியிலான போட்டியில் இறங்கியுள்ளோம். கொள்கையில் உறுதியான போரை நடத்துவதற்காகவே, நான் போட்டியிடுகிறேன் என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்துப்பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், ’மீராகுமாரை  பொதுவேட்பாளராகக் கருதி ஆதரிக்க வேண்டும். தற்போது நாடு நெருக்கடியான நிலையில் இருக்கிறது. ஊழல், வறட்சியை ஒழிக்க வந்தவர்கள் மதச்சார்பின்மையை ஒழிக்கப் பார்க்கின்றனர்’ என அவர் குற்றம்சாட்டினார்.