டிரெண்டிங்

“ஒரே நேரத்தில் தேர்தல் வரவேற்கத்தக்கது”- திருமாவளவன்

webteam

நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பது வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதியின் எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

"ஒரு நாடு, ஒரு தேர்தல்" என்கிற அடிப்படையில் ஆலோசனை நடத்த மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் ஜூன் 19ஆம் தேதி நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்வார்கள். அதேபோல், ஜூன் 20 ஆம் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதியின் எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும். நீர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம். இரட்டை தலைமை என்பதை டெல்லி தலைமை மற்றும் தமிழக தலைமை என எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.