பிரதமருக்கு பச்சைக்கொடி காட்டுவோம் என்று தமிழக அமைச்சர் கூறியது வரலாற்று பிழையாக அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்திலிருந்து காவிரி உரிமை மீட்பு 2 வது குழுவினர் இரண்டாவது நாளாக நடைப்பயணம் தொடங்கினர். இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயளாலர் பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திருமாவளவன், பிரதமருக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்ற அமைச்சரின் பேச்சு வரலாற்றுப் பிழையாக அமையும். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியிருப்பதன் மூலம், அதிமுகவை வழிநடத்த அரசியல் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என தெரிவதாக விமர்சித்தார். மேலும், ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பது வேதனையளிப்பதாகவும் திருமாவளவன் கூறினார்.