திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பாகி உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்கள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
திமுகவை பொருத்தவரை, காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, மதிமுக, விசிக உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே, பேச்சுவார்த்தைக்கு பின் ஐயூஎம்எல், மமக ஆகிய இரண்டுக் கட்சிகளுக்கும் தலா 3 மற்றும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தற்போது விசிக கட்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்குபின் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.