மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்நேரத்தில் "பாஜக ஆட்சியை மக்கள் விமர்சிக்கிறார்கள்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
பா.ஜ.க. ஆட்சியமைத்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்திய மக்களுக்காக தொடர்ந்து உத்வேகத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மத்திய அரசு பணியாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பா.ஜ.க.வின் நான்கு ஆண்டுகால ஆட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் “தமிழகத்தை மத்திய அரசின் கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருகிறார்”என்று குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் 4 ஆண்டு கால மோடி அரசின் ஆட்சி, அனைத்து தரப்பினராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.