டிரெண்டிங்

ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

Rasus

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.ஸ்டாலினை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார்.

தமிழக அரசியல் சூழலில் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது, நாளை நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை ஸ்டாலினிடம் திருமாவளவன் வழங்கினார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநில சுயாட்சி மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்குகிறார். திராவிடர் கழக தலைவர் வீரமணி முன்னிலை வகிக்கிறார்.