மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் தான், பாரதிய ஜனதா கட்சியை மதவாத கட்சி என்று முத்திரை குத்துவதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை மாநகராட்சி மற்றும் பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களின் முகத்திரை கிழிந்துவிடும் என்று கூறினார். பாரதிய ஜனதா கட்சியில் தலைவர் என்ற வார்த்தையே கிடையாது என்றும், பிரதமர் நரேந்திர மோடி முதன்மை சேவகன் என்றும் அண்ணாமலை கூறினார்.