ரஜினி வாழ்த்தியதால் எங்களுக்கு எந்த வரமும் இல்லை. செலவும் இல்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
அண்மையில் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நடிகர் ரஜினி தனது வாழ்த்துகளை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலுவும், துரைமுருகனும் ரஜினியின் நண்பர்கள். அதனாலேயே அவர் வாழ்த்தியுள்ளார். ரஜினி வாழ்த்தியதால் எங்களுக்கு எந்த வரவம் வரப்போவதில்லை. அவர் வாழ்த்தாததால் எங்களுக்கு எந்த செலவும் இல்லை என்று பேசியுள்ளார்.