ஆர்.கே.நகரில் நியாயமாக தேர்தல் நடைபெறவில்லை என்றால் தேர்தலை நடத்தி பயன் இல்லை என தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
அர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, 'ஜனநாயக முறைப்படி நேர்மையாக தேர்தலை சந்திக்க அனைத்துக்கட்சியினருக்கும் உரிமை உள்ளது. ஆர்.கே.நகரில் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு பணப்பட்டுவாடா செய்து வருகின்றன. நாங்கள் கூறும் புகார்களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. புகார்கள் குறித்து நீங்கள் ஆராயுங்கள். நேர்மையாக தேர்தல் நடத்த முடியும் என்றால் நடத்துங்கள். நியாயமாக நடைபெறவில்லை என்றால் தேர்தலை நடத்தி பயன் இல்லை’ என அவர் தெரிவித்தார்.