கொடைக்கானல் மேல்மலை பூண்டி கிராமத்தின், துணை சுகாதார நிலையத்திற்கு செல்ல பாதை இல்லாததால் மக்கள் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிரமமான பூண்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லை. இதனால் அக்கிராம மக்கள் மருத்துவத்திற்காக சுகாதார நிலையம் செல்ல பூண்டி அரசு பள்ளி வளாகம் வழியாக கடந்த முப்பது ஆண்டுகளாக சென்றுவந்துள்ளனர்.
ஆனால் தற்பொழுது, பள்ளி வளாகத்தை சுற்றி பாதுகாப்புச் சுற்றுச்சுவர் கட்டப்படுவதால், மருத்துவத்திற்காக சுகாதார நிலையம் செல்ல பாதை இல்லாமல் தவித்துவருவதாக கூறுகின்றனர். எனவே இதனை கோட்ட நிர்வாகம் ஆய்வு செய்து துணை சுகாதார நிலையத்திற்கு செல்ல முறையான பாதை அமைத்துத்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.