இஸ்ரோ விஞ்ஞானிகள்
இஸ்ரோ விஞ்ஞானிகள் WebTeam
டிரெண்டிங்

”பழங்கால நூல்களில் உள்ள விண்வெளி தத்துவங்களை இளைய தலைமுறை வெளிச்சமிட்டுக்காட்ட வேண்டும்" - பிரதமர்

PT WEB

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றார். தென்னாப்ரிக்கா, க்ரீஸ் பயணங்களை முடித்துக் கொண்டு நேராக அவர் பெங்களூரு வந்தார்.

பின்னர் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “நிலவில் சந்திரயான் தரை இறங்கிய இடத்துக்கு "சிவசக்தி" என பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23ம் நாள் இனி "தேசிய விண்வெளி தினம்" ஆக கொண்டாடப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களுடைய கடும் உழைப்பால் மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளனர். இந்திய விண்வெளித் துறை வருங்காலத்தில் மிகவும் வேகமான வளர்ச்சி பெறும்.

பழங்கால இந்திய நூல்களில் உள்ள விண்வெளி தத்துவங்களை இளைய தலைமுறை வெளிச்சமிட்டுக்காட்ட வேண்டும்” என்றார். இறுதியாக “பாரத் மாதா கி ஜெய்” என முழக்கமிட்டு தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார்.