டிடிவி தினகரன் அணியில் இருந்த எம்எல்ஏ ஜக்கையன் திடீரென முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு மாறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், ஏற்கனவே தனித்தனியாக ஆளுநரிடம்கடிதம் கொடுத்திருந்தனர். அவர்களில் எம்எல்ஏ ஜக்கையனும் ஒருவர்.
இந்நிலையில், தினகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏ ஜக்கையன் திடீரென முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு மாறியுள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜக்கையன், " என்னுடைய விருப்பம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தொடர வேண்டும் என்பதே. சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸிற்கு நேரில் விளக்கம் அளிக்கவே தலைமை செயலகம் வந்தேன். தற்போது அதிமுகவில் நடைபெற்று வரும் உட்கட்சி பிரச்னையை திமுக பயன்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் மெஜாரிட்டி அதிகம் உள்ள அணிக்கு நான் மாறுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
தினகரன் அணியில் இருந்து கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்ற தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் முகாமிட்டுள்ளனர். இவர்களில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையனும் உடன் இருந்தார்.பிக்பாஸ் தங்க தமிழ்ச்செல்வன் கட்டுப்பாட்டில் இந்த எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இந்த நிலையில் இன்று தினகரன் முகாமில் இருந்து தப்பியுள்ளார் கம்பம் ஜக்கையன்.புதுவையில் இருந்து சென்னை திரும்பிய ஜக்கையன், சபாநாயகர் தனபாலை சந்தித்தார். அப்போது தாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பதாக