டிரெண்டிங்

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு : கிரண்பேடிக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு : கிரண்பேடிக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

webteam

புதுச்சேரி மாநில அரசுக்கு விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கான அதிகாரம் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கடிதம் எழுதியுள்ளது. 

நாடு முழுவதும் வறட்சி காரணமாக விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுமாறு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியிலும் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்யுமாறு கோரிக்கை எழுந்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் கோப்பு தயார் செய்யப்பட்டு ஆளுநர் கிரண்பேடியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கிரண்பேடி கோப்பை நிராகரித்து, அதை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தார்.  

இந்நிலையில் தற்போது, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உள்துறை அமைச்சகம் கிரண்பேடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.