டிரெண்டிங்

இமானுவேல் சேகரன் பெயரை விமான நிலையத்துக்கு வைக்க வேண்டும்- கிருஷ்ணசாமி கோரிக்கை

இமானுவேல் சேகரன் பெயரை விமான நிலையத்துக்கு வைக்க வேண்டும்- கிருஷ்ணசாமி கோரிக்கை

webteam

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக விளங்கியவர் இமானுவேல் சேகரன். அவரது பிறந்த தினம் இன்று.

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான தியாகி இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார் இம்மானுவேல் சேகரன். அடக்கு முறைக்குட்பட்ட சமூகத்தில் உதித்த காரணத்தினால் சிறுவயதிலேயே இன விடுதலை வேள்வியால் வளர்ந்த இவர் இந்திய தேசத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் மீது, கோபமும், கொந்தளிப்பும் கொண்டார். அதன் எதிரொலியாக 1942ம் ஆண்டு தனது தந்தை வேதநாயகத்தோடு விடுதலை வேள்வி வெறியோடும், வெள்ளையனே வெளியேறு போராட்ட களத்தில் குதித்தார்.

இம்மானுவேல் சேகரன் எதிர்காலத்தில் தேசம் திரும்பி பார்க்கும் தலைவராக திருப்பு முனையை ஏற்படுத்தப்போகும் களம் அது என்று அறியவில்லை. இருந்தும் இந்திய தேசத்திற்காக களத்தில் குதித்தவர் 3 மாதம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சோதனைகளை சந்தித்தார். நாட்கள் உருண்டோடின. அடக்குமுறை சமூகத்தின் அவலத்தை அகற்றிட வேண்டும் என்ற லட்சிய வெறியோடு வலம் வந்தார். இரட்டை டம்பளர் முறைக்கு எதிராக தனது 19வது வயதில் அருப்புக்கோட்டையில் தலித்துக்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட இரட்டை டம்பளர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தமுறையை சமூகத்திலிருந்து அகற்றிட மாநாடு நடத்தி தனது சமூக மக்களிடம் மட்டுமின்றி பிற சமூக மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

1954ம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு ஒன்றினையும் நடத்திய அவர் தனது சமுதாய மக்கள் மத்தியில் அன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக வலம் வரத்தொடங்கினார். இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சியும், அம்மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியும் பிற சமூகத்தை லேசாக உசுப்பிப் பார்க்க தொடங்கியது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன்.

இவரது  பெயரில் விமானநிலையம் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் இவர்.