கோவை மதுக்கரை வனத்தை ஓட்டிய பகுதியில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க, வனத்துறை கூண்டு வைத்துள்ளனர்.
மதுக்கரை வனச்சரகம் விநாயகர் கோவில் வீதி அருகே பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகளை காட்டிலிருந்து வெளியே வந்த சிறுத்தை ஒன்று அடித்துக்கொன்றது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
நீண்ட நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் தென்படாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்குள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் அருகே சிறுத்தை நடமாடுவதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நிகழ்விடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சென்ற போது சிறுத்தையானது ஒரு நாயை அடித்துக் கொன்றது தெரிய வந்தது.
இதனால் சிறுத்தையை பிடிக்க தர்மலிங்கேஸ்வரர் கோவில் அருகே ஒரு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கூண்டினுள் நாயை அடைத்து வைத்து வனத்துறைனர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.