தமிழகத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி விட்டு மீண்டும் ஆட்சியமைக்கும் என பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார். புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்
புதிய தலைமுறை செய்தியாளருடன் அவர் நடத்திய உரையாடல்:
உங்கள் பரப்புரைக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறுமா?
தெருக்களில் மக்கள் கூடுகின்றனர். ஆதரவு முழக்கம் எழுப்புகின்றனர். எங்களை வரவேற்கின்றனர். அதிமுக அணி மீண்டும் ஆட்சியமைத்து வளர்ச்சியை தர வேண்டும் என விரும்புகின்றனர்
தேர்தல் முடிவுகள் குறித்த சில கருத்து கணிப்புகள் உங்களுக்கு சாதகமாக இல்லையே?
எல்லாருமே கருத்து கணிப்பு நடத்துகின்றனர். ஆனால் இங்கு கூடியுள்ள கூட்டமே தேர்தல் முடிவு என்ன எனச் சொல்லும்.
தங்கள் தேர்தல் பணிகளை முடக்க வருமான வரி சோதனை நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனவே?
நல்ல செயல்கள் செய்தவர்களுக்கு எந்த கெடுதலும் வராது. தவறு செய்தவர்கள் அதற்குரிய பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும். சட்டம் தன் கடமையை செய்து வருகிறது