டிரெண்டிங்

கர்நாடக சட்டபேரவைக்கு வந்தார் எம்.எல்.ஏ அனந்த் சிங்

கர்நாடக சட்டபேரவைக்கு வந்தார் எம்.எல்.ஏ அனந்த் சிங்

webteam

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் பா.ஜ.கவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, எடியூரப்பா முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவை கூடியது. மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால்  வெற்றிப் பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு  மூத்த உறுப்பினர் போபபையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர் வாரததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில், ஜனார்த்தன ரெட்டியின் சகோதரான சோமசேகர் பிடியில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹோட்டலில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனைதொடர்ந்து பெங்களூருவில் உள்ள தாஜ் ஃபிஞ்சு ஹோட்டலுக்கு டிஜிபி தலைமையில் போலீஸ்சார் விரைந்தனர்.  போலீஸ்சார்  எம்.எல்.ஏ அனந்த் சிங்கை மீட்டு பலத்தப் பாதுகாப்புடன் கர்நாடக சட்டபேரவைக்கு அழைத்து வந்தனர். வெற்றிப் பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்த் சிங் இன்னும் சற்று நேரத்தில் எம்.எல்.ஏ வாக பதவியேற்க உள்ளார்.