இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி தான் பேசவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டியதால் தான் அதை இடித்து இருப்பதாக சங்பரிவார் அமைப்புகள் கூறுகின்றனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு விவாதத்திற்காக தான் புத்த விஹார்கள் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள பெருமாள், கோவில் உள்ளிட்ட கோவில்களை இடித்து விட்டு மீண்டும் புத்த விஹார்களை கட்டத் தயாரா? என்று தான் பேசியதாக கூறினார்.
இந்து மக்களின் மனதை புண்படுத்தும்படி தான் பேசவில்லை என்றார். அதேபோல் தனது கருத்தில் இருந்து பின்வாங்க போவது இல்லை. புத்த விஹார்கள் இருந்த இடத்தில் கோவில்கள் கட்டப்பட்டிருப்பது குறித்து பல வரலாற்று சுவடுகளும் ஆய்வறிக்கைகளும் இருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். தன் மீதுள்ள காழ்புணர்ச்சி காரணமாக இது போன்று பரப்பபடுவதாகவும் கூறினார்.
இது குறித்து எச். ராஜா போன்றோர் வழக்கு தொடர்வதாக கூறியிருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.