தஞ்சை ஆவின் நிறுவன மேலாளரை கத்தியால் குத்திய காவலாளியை, சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த அன்புநாதன் என்பவர் சரியாக வேலைக்கு வராததால், அவர் குறித்து மேலாளர் திருமுருகன் மேலிடத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அன்புநாதன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அன்புநாதன், மேலாளர் திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.வாக்குவாதம் முற்றிய நிலையில் திருமுருகனின் கையில் கத்தியால் குத்திய அன்புநாதன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அன்புநாதனை காவல் துறையினர் கைது செய்தனர்.