டிரெண்டிங்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : சட்டப்பேரவையில் காரசார விவாதம்

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசினார்.‌ ஸ்டெர்லைட் விவகாரத்தில் 22 ஆண்டுகளாக நடந்த போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு கண்ட முதலமைச்சர் பழனிசாமி மக்களின் முதல்வர் என்றும், தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

இதன்பின் பேசிய தமிமுன் அன்சாரி, போராட்டக்காரர்களை தண்ணீரைப் பீய்ச்சி ஏன் ‌கலைக்கவில்லை, சீருடை அணியாத காவலர்களைக் கொண்டு காக்கா , குருவி போல் மக்களை சுட உத்தரவிட்டது யார் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் பேசிய டிடிவி தினகரன், ஆலையை மூடும் உத்தரவை மக்கள் நம்பவில்லை என்று‌ கூறியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் அங்கு கலவரம் ஏற்படும் வகையில் தினகரன் பேசுவதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார். மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ஆட்சி‌ போகுமா என பலர் பார்க்கிறார்கள். அது நடக்காது என்று தங்கமணி தெரிவித்தார்.