டிரெண்டிங்

சூலூர் சட்டமன்றத் தொகுதி காலி - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

webteam

சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் கனகராஜ். வயது 64. இவர் நேற்று வழக்கம்போல அதிகாலை வீட்டில் அமர்ந்து தினசரி செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வழக்கு காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவாக இருந்த ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் பதவியில் இருக்கும் அதிமுக எம்எல்ஏ ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனால் இந்தத் தொகுதிக்கும் 3 தொகுதிகளுடன் சேர்த்து இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

கனகராஜ் உயிரிழந்ததையடுத்து சூலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 21 லிருந்து 22 ஆக உயர்ந்துள்ளது.