டிரெண்டிங்

"தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி நாங்கள்தான்”- உரிமை கொண்டாடும் காங்கிரஸ், பாஜக

"தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி நாங்கள்தான்”- உரிமை கொண்டாடும் காங்கிரஸ், பாஜக

JustinDurai

காங்கிரஸ் கட்சி 73 மாநகராட்சி வார்டுகளிலும், 151 நகராட்சி வார்டுகளிலும், 368 பேரூராட்சி வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 21 மாநகராட்சிகளையும் திமுக தன்வசமாக்கி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்திருந்த காங்கிரஸ் கட்சி 73 மாநகராட்சி வார்டுகளிலும், 151 நகராட்சி வார்டுகளிலும், 368 பேரூராட்சி வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி மீண்டும் உருவெடுத்துள்ளதாக அக்கட்சித் தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் 3வது மிக பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்து உள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதா? - தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?