டிரெண்டிங்

நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்

webteam

நீட் தேர்வுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மதுரை பழங்காநத்தத்தில் பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ஈரோட்டில் படைவீரர் மாளிகை முன் கூடிய 100க்கும் அதிகமான பாரதிய ஜனதாவினர், நீட்டுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

நீட் மூலம் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதால் தரமான மருத்துவர்கள் உருவாவார்கள் எனக்கூறி நாமக்கல்லில் போராட்டம் நடைபெற்றது.