டிரெண்டிங்

தஞ்சை,புதுகை,இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

தஞ்சை,புதுகை,இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

Veeramani

தஞ்சை,புதுகை,இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெற்றனர்.

தஞ்சை, புதுகை,ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வந்த பழைய நடைமுறையிலேயே எப்பொழுதும் போல மானியத்தை கழித்துக்கொண்டே டீசலுக்கான பணத்தைச் செலுத்தி ஸ்மார்ட் கார்டு மூலமாக டீசலை மீனவர்கள் வழக்கம் போல பிடித்துக் கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்து கொடுப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவளித்துள்ளார்.அதனடிப்படையில் மீனவர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றனர். வழக்கம் போல் திங்கள் கிழமை(ஜூலை 3) முதல் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள் என்று தமிழ்நாடு மீனவ பேரவை மாநில பொதுச்செயலாளர் ஏ.கே. தாஜூதீன் கூறினார்.