டிரெண்டிங்

ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் தினகரனுக்கு இல்லை: தங்கத்தமிழ்ச்செல்வன்

ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் தினகரனுக்கு இல்லை: தங்கத்தமிழ்ச்செல்வன்

Rasus

ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் டிடிவி தினகரனுக்கு இல்லை என்று அவரின் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “நாங்கள் டிடிவி ஆதரவு அணி இல்லை; அதிமுக அம்மா அணி. இதுதான் உண்மையான அதிமுக. எங்களிடமிருந்து பிரிந்து ஓ.பி.எஸ். உடன் 10 எம்.எல்.ஏ.க்கள் சென்றுவிட்டனர். எங்களுடைய கட்சிக்கு டிடிவி தினகரன் தான் துணைப் பொதுச்செயலாளர். அதனால்தான் அவரைப் பார்க்க எம்.எல்.ஏ.க்களும், மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் வருகிறார்கள். அவரை இப்போது சந்திப்பதற்கான நோக்கம், அவர் விலகியிருந்தால் பிரிந்தவர்களோடு ஒற்றுமை ஏற்படும் என்று சில அமைச்சர்கள் சொன்னார்கள். அவரும் விலகியிருந்தார். ஒரு வழக்கில் 45 நாட்கள் திஹார் சிறையில் இருந்தார். திரும்பிவந்து பார்க்கும்போது இரு அணிகள் இணைவதில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அவரை விலக்கி வைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. எனவே கட்சியின் நன்மை கருதி அவரை சந்தித்து வருகிறோம். நேற்று 30 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனை வந்து சந்தித்தனர். இன்று 50 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர் நினைத்திருந்தால் நேற்றே ஆட்சியைக் கலைத்திருக்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் அவருக்கு இல்லை” என்று தங்கத்தமிழ்ச்செல்வன் கூறினார்.